இந்தியா

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் – கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்

தனது ஆட்சியில் தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் என தெரிவித்த விஜய் இலஞ்சம் இன்றி ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்றடையும் எனவும் கூறினார்.

அரசின் திட்டங்களைப் பெற தன் அடையாள அட்டை தரப்படும் என்றும் 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மக்களின் மனுக்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என்றும் விஜய் மேலும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *