இந்தியா

விஜய் கட்சியை மறந்து, பழைய கட்சிக்கே ஓட்டு கேட்ட செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செங்கோட்டையன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது,

எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு போட்டால் அது நோட்டாவாக மாறிவிடும் என தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார்.

இறுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வாய் தவறி கூறினார்.

பின்னர் திடீரென சுதாரித்துக் கொண்டு இரட்டை இலை சின்னத்தை நான் கேட்டு கேட்டே பழகி விட்டேன் எனவும், ஒரு மூதாட்டி தான் கோபி செட்டிபாளையத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது உங்களுக்குத்தானே எப்பொழுதும் வாக்களிப்போம் இரட்டை இலை சின்னம் தானே என கூறினார் .

ஆனால், நான் தற்போது விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் எனக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அவரும் அதற்கு நிச்சயம் உங்களுக்கு தான் எனது வாக்கு என்று கூறியதாக கூறி சமாளித்து, பேசினார். செங்கோட்டையனின் இந்த பேச்சால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *