நிகழ்வுகள்

புலோலியூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா தியான மண்டப மகா கும்பாபிஷேகம் 

புலோலியூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா தியான மண்டப மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(12) நடைபெறவுள்ளது.இன்றை தினம் சுப வேளையில் காலை 9.05 மணிக்கு யாக பூசை ஆரம்பித்து 10 மணி வரை மகா கும்பாபிஷேக பூசை இடம்பெறும்.

இத் தியான மண்டபத்திற்கான ஸ்ரீ சீரடி சாயி பாபாவின் விக்கிரகம் கரணவாய் ஸ்ரீ அபய சீரடி சாய் ஆலயத்திலிருந்து திருவுருவங்களின் வீதி வலம் கடந்த 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பமாகி நெல்லியடிச் சந்தி, வதிரி புளியடி சந்தி, மாலைசந்தை விநாயகர் வீதி, மந்திகைச் சந்தி, பெரிய தேவானத்தாய் விநாயர், உபய கதிர்காம, மந்திகை ஆலடி வீதி, மந்திகை அம்மன் ஆலயம் ஊடாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி மந்திகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புலோலியூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா தியான மண்டபத்தை வந்தடைந்தது.
இக் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் 9ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.10ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் பாபாவுக்கு பால் காப்பும், பிள்ளையாருக்கு எண்ணெய்க்காப்பும் சாத்துதல் இடம்பெற்றது.

தொடர்ந்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை ருத்திரபாராயணம் அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான யாக பூசை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இக் கிரியைகள் பூர்த்தி அடைந்ததும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.05 மணி முதல் 10 மணி வரையான சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறும். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நாட்டிய கலை நிகழ்ச்சி, சீரடி சாய் பயனை நடைபெற்று பின் பக்தர்களுக்கு திருவருள் பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படவுள்ளது என தியான மண்டப நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *