முச்சந்தி

அகண்ட இஸ்ரேலுக்காக பலியாகும் ட்ரம்ப்: அமெரிக்காவின் அறியாமையா ?போலி வேஷமா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நீண்ட காலமாக ஈரானைத் தாக்க அமெரிக்காவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே நெதன்யாகுவின் நோக்கம் ஆகும். தற்போது அவரது எண்ணம் ட்ரம்பால் இலகுவாக நிறைவேறி வருகிறது என்பதே உண்மை)
தற்போதய இஸ்ரேலிய தேசத்தை மேலும் வலுவாக்க மேற்கு கரையை (West Bank) இணைத்து அகண்ட இஸ்ரேலை (Greater Israel) உருவாக்கும் நெதன்யாகுவின் திட்டத்திற்க்கு வலிமை சேர்க்கும் வகையில் டிரம்பின் போர் வியூகங்கள் அமைந்துள்ளன. ஆயினும் இறுதியில் நெதன்யாகு தனக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொள்பவராக விளங்குவார்.
நீண்ட காலமாக ஈரானைத் தகர்க்க அமெரிக்காவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்நாள் இலட்சியம். தற்போது அவரது எண்ணம் இலகுவாக நிறைவேறி வருகிறது என்பதே உண்மை ஆகும்.
அத்துடன் கடந்த 14 மாதங்களில் டிரம்பின் போர் முறையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டது என்னவென்றால், அவர் ஒருபோதும் தனது இலக்குகளைத் தெளிவாகச் சொல்வதில்லை. எனவே ஈரான் போரில் ட்ரம்ப் அரசு தோல்வியடைந்து விட்டதாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் ஒரு புதுக் கதையைச் சொல்லி, தனக்குத் தோன்றும் நேரத்தில் “வெற்றி” என்று அறிவித்துவிட்டு வெளியேறிவிடுவார். ஆனால் அந்த நாடு என்னவானாலும் அவருக்குக் கவலையில்லை, மேலும் அதனைப் பற்றி அவர் எதிர் காலத்திலும் கவலைப்பட மாட்டார்.
எதிர் வரும் மாதங்களில் என்ன நடந்தாலும், நெதன்யாகு அடுத்த இஸ்ரேலியத் தேர்தலில் வெற்றி பெறக்கூடும். அது அவரை ஊழல் வழக்குகளிலிருந்து பாதுகாக்கும் என்பதை உறுதியாக கூறலாம். மேலும் மேற்கு கரையை இணைத்து அகண்ட இஸ்ரேலை உருவாக்கும் அவரது திட்டத்திற்கு வலிமை சேர்க்கும் டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகளால் ஈரானில் நிலையான அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. மாறாக, அங்கு குழப்பமான சூழலும், கூடுதல் துயரங்களுமே மிஞ்சப்போகின்றன.
இதனாலேயே தற்போதைய வளைகுடாப் போரில்
டிரம்பால் தனக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்பவர் நெதன்யாகு மட்டுமே. ஈரானைத் தகர்க்க அமெரிக்காவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறி வருகிறது.
அமெரிக்க அரசு வியட்நாமிலிருந்து கற்றுக்கொண்ட இரண்டு பாடங்களை மீண்டும் ஒருமுறை பரிசீலித்து பார்க்க முயல்கிறது. வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் இருந்தால் ஒழிய போருக்குச் செல்லாதே. அத்துடன் உன் எதிரி எவ்வளவு பலவீனமானவனாகத் தெரிந்தாலும், அவனது மனஉறுதியையும் வளங்களையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே. இதை கற்றுக்கொள்ள தற்போதய ட்ரம்ப் அரசும் முயல்கிறது.
அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கசப்பான உண்மைகளைப் பேசவும், சொந்த மக்களுடன் இணைந்து பணியாற்றவும், போரில் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் அமெரிக்க முயன்றாலும், ஈரானிய போர்க்களத்தில் இவை அனைத்தும் சாத்தியம் இல்லாத நிலையில் தான் உள்ளது.
அமெரிக்க அறியாமையா வேசமா ?
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை என்று அமெரிக்க மக்கள் பெருமளவில் கருதுகிறார்கள். விளைவுகளைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தனது அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஒரு மனிதரிடமிருந்துகூட இத்தகைய செயலை எதிர்பார்க்க முடியாது. ஈரான் மீதான தாக்குதலானது தேவையற்ற போர் என்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
நெதன்யாகுவின் சுயநலம்:
அகண்ட இஸ்ரேலை உருவாக்கும் நெதன்யாகு ஆட்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக தற்போதய போரை அவரே வழி நடத்துகிறார். இது மேற்கத்திய நாடுகளின் கவனத்திற்கு வராமலேயே படிப்படியாக நடந்து கொண்டிருக்கிறது. அகண்ட இஸ்ரேல் அமைந்தால் நெதன்யாகுவின் இஸ்ரேலுக்குள் அரசியல் உரிமைகள் வழங்கப்படாத பாலஸ்தீனியர்களின் நிலை என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.
உலகமே டிரம்ப்பும் அவரது குழுவினரும் கொண்டுள்ள அறியாமையைக் கண்டு திகைத்துப் போயுள்ளது. ஈரானிலும், ஆபிரிக்காவிலும் அவர்கள் தடுப்பூசித் திட்டங்களை ரத்து செய்கிறார்கள், பசியால் வாடுபவர்களுக்கான உணவு உதவியை நிறுத்துகிறார்கள், பருவநிலை மாற்றத்தை மறுக்கிறார்கள், உலகளாவிய ஒழுங்கின் தூண்களைத் தகர்க்கிறார்கள் மற்றும் உண்மையை நிராகரிக்கிறார்கள். இப்போது அவர்கள் போர் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் விளைவாக வரும் பலனாக, டிரம்பின் போரால் தனக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்பவர் நெதன்யாகு மட்டுமே. ஈரானைத் தகர்க்க அமெரிக்காவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்நாள் லட்சியம். வரும் மாதங்களில் என்ன நடந்தாலும், நெதன்யாகு அடுத்த இஸ்ரேலியத் தேர்தலில் வெற்றி பெறக்கூடும். அத்துடன் அது அவரை ஊழல் வழக்குகளிலிருந்து பாதுகாக்கும்.
வியட்நாமிலும் மற்ற இடங்களிலும் உண்மையாகப் போர்க்களத்தில் நின்றவர்கள் ட்ரம்ப் தலைமையிலான போரை நிராகரித்துள்ளனர். அவரது ஆட்சியின் முட்டாள்தனத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் – குறிப்பாக ஈரான் மக்களும் – பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எதிர்வரும் நாட்களில் நிச்சயம் தெரியும்.
டிரம்பின் விசித்திர வியூகங்கள்
டிரம்பின் பதவியேற்பு நாளில் இருந்து உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதாக கூறினார். ஆனால், விளாடிமிர் புட்டினிடம் சமரசம் செய்ய தவறுவிட்டார். விலோடிமிர் செலென்ஸ்கியை மிரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் இப்போது கண்டறிந்துள்ளார்.
டிரம்பின் ஈரான் முட்டாள்தனத்திற்காக உக்ரைன் குடிமக்கள் பெரும் விலையைக் கொடுப்பார்கள். ஏனெனில் அமெரிக்காவின் ஆயுதங்கள் மத்திய கிழக்கில் தற்போது தீர்ந்து கொண்டிருக்கின்றன.
மற்றொரு பக்கம், வெனிசுலாவின் அதிபர் மதுரோவைப் பதவி நீக்கம் செய்வதாகக் கூறித் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த டிரம்ப், இப்போது வெனிசுலா மக்களை மதுரோவின் கூட்டாளிகளின் பொறுப்பில் விட்டுவிட்டு மீண்டும் நகர்ந்து விட்டார்.
ஈரானில் அமைதி நிலவுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. அங்கு குழப்பமான சூழலும், ஈரானியர்களுக்குக் கூடுதல் துயரங்களுமே மிஞ்சப் போகின்றன. உச்சத் தலைவர் அலி கமேனியின் மறைவின் காரணமாக ஈரான் ஒற்றுமைப் பட்டுள்ளது.டிரம்ப் தனது அகங்காரத்தால் இயக்கப்படுபவர். தனது செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் மீது அவருக்கு எந்த இரக்கமும் இல்லை என்பது வெளிப்படை.
அமெரிக்காவின் தோல்வியுற்ற போர்கள்:
ஈரான் மீதான தாக்குதல் வியட்நாம், ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்காவின் தோல்வியுற்ற போர்களைப் போன்றது அல்ல. ஏனெனில் ஒவ்வொன்றின் சூழலும் வேறுபட்டவை. ஆனால், இவை அனைத்திற்கும் பொதுவான ஒரு காரணியை அடையாளம் காண முடியும். அதாவது ஆக்கிரமிப்புக்கான அடிப்படையே இந்த போர்களாகும்.
அமெரிக்கா ஈரானின் மலைகளுக்கும் பள்ளங்களுக்கும் சென்று தாக்குவது தனது சொந்த சுயநலத்திற்காகத்தான். தாம் யாரைக் காப்பாற்றப் போவதாகச் சொன்னார்களோ, அந்த மக்கள் மீது அவர்கள் காட்டும் அக்கறை என்பது போலி வேஷமே.
வியட்நாம் குறித்து முன்னாள் போர் வீரர் எழுதிய புத்தகத்தில், வெள்ளை மாளிகையில் இரண்டு தசாப்தங்களாக நடந்த வியட்நாம் போர் குறித்த மூலோபாயக் கூட்டங்களில் அமெரிக்கர்கள் மட்டுமே இருந்தனர். ஒரு வியட்நாமியர்கூட இல்லை. இறுதியில், ஹனோய் நகரத்தில் வியட்கொங் தலைவர்கள் போரில் வென்றார்கள். ஏனெனில் அவர்கள் வியட்நாமியர்கள். ஆனால் சாய்கானில் (Saigon) அமெரிக்காவின் கையாட்களாக இருந்தவர்கள் தங்கள் நாட்டு மக்களால் கூட அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அமெரிக்க அரசும் ஒப்புக் கொள்ள மறுத்தது.
அதேவேளை ஈராக் மீது போர் தொடுத்ததற்கு முக்கியக் காரணம் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், சதாம் உசேன் மீது கொண்டிருந்த பகைதான். பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கிடம் இருப்பதாகப் பொய்ச் சான்றுகளை உருவாக்க அவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயருடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய வாக்கெடுப்பில், 2003இல் நடந்த ஈராக் படையெடுப்புதான் அமெரிக்க வரலாற்றில் வெளியுறவு தொடர்பான மிக மோசமான தவறு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது டிரம்பின் ஆதரவாளர்கள் (MAGA), முந்தைய அதிபர்கள் செய்ததையே இவரும் செய்கிறார் என்று வாதிடலாம். ஆம், அவர்களும் தாங்கள் எடுக்கப்போகும் ராணுவ நடவடிக்கைகளை ரகசியமாகவே வைத்திருந்தனர். வெள்ளை மாளிகை இன்றும் அதையே செய்கிறது. பழைய தவறுகள் தொடர்கின்றன. இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள உலகம் பெரும் விலையைக் கொடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் அந்தப் பாடங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது.
மிகவும் நகைச்சுவையாக ஈரானில் தனது இலக்குகள் என்ன என்பது குறித்து டிரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறார். ஆட்சி மாற்றம் என்பார், அடுத்த நாள் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அது எங்கள் பட்டியலில் இல்லை என்பார். ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பேன் என்பார். கடந்த ஆண்டு ஜூன் மாதமே அதை ஒரே ஒரு குண்டுவீச்சில் அழித்துவிட்டதாகக் கதை விடுவார். அமெரிக்க வீரர்களை அனுப்பாமல் ஈரானை நிராயுதபாணியாக்குவேன் என்பார். பிறகு வீரர்களை அனுப்பவும் கூடும் என்பார்.
எவ்வாறாயினும் அகண்ட இஸ்ரேலுக்காக பலியாகுவது ட்ரம்ப் அரசும், அவரது படையினரும் தான். அமெரிக்காவின் அறியாமையும் போலி வேஷமும் விரைவில் உலக அரங்கில் வெளிப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *