இலங்கை

நீரிணைகளை திறப்பதற்கு ஜீ-07 அமைப்பு அழுத்தம்?

மத்தியகிழக்கு போரை முடித்து வைக்கும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதில் ஏற்படவுள்ள தடைகளை விளக்கமாகக் கூறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதற்கான முயற்சிகளில் சவூதிஅரேபியா, எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருந்தன.

எனினும் ஏனைய மூன்று நாடுகளதும் நடுநிலைமையில் ஈரான் சந்தேகம் வௌியிட்டதால், பாகிஸ்தான் தனியே நின்று இதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வௌியிட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் போர் முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையிலே, பாகிஸ்தானின் இந்த முயற்சி குறித்து செய்திகள் வௌியாகியுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை மற்றும் செங்கடல் நீரிணைகளை பணயமாக வைத்து ஈரான் போரில் ஈடுபட்டுள்ளதால்,சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை ஜீ-07 நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. இதனால், அடுத்தவாரம் கூடவுள்ள ஜீ-07 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், இந்நீரிணைகளை திறப்பதற்கான மூலோபாயங்களில் கவனம் செலுத்துமென்றும் அல்ஜஸீரா ஆரூடம் கூறியுள்ளது.

இந்நிலையில், ஜேர்மன் அதிபர் இவ்விடயத்தில் ஈரானை வழிக்கு கொண்டுவருமாறு ஈரானின் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் உரையாடியுள்ளார்.

இஸ்ரேலின் சிறைகளிலுள்ள பலஸ்தீனர்ளை தூக்கிலிட்டு கொல்வதற்கு இஸ்ரேல் பாராளுமன்றம் (நெசட்) எடுத்திருந்த தீர்மானத்தால்,இந்த யுத்தம் பழிவாங்கல் படலமாக விரியும் என்றும் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நிகழ்ந்தால்,கைதியாகப் பிடிக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வீரர்களும் தூக்கிலிடப்படுவரென ஈரான் எச்சரித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் தேவைகளில் பாதிப்பங்கை பூர்த்தி செய்யும் கடல் வழிகளை மறித்து ஈரான் யுத்தம் செய்வதே,இந்த மோதல் சகல நாடுகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *