இலங்கை

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை; AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவிற்குச் செல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளின் பண்டார இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:

செயற்கை நுண்ணறிவில் செய்யப்பட்டது

நூல் வெளியீட்டு விழாவில் சஜித் கலந்து கொண்டாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் அங்கு செல்லவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு | Sajith Did Not Participate Gammanpila Book

அவர் எப்படி அங்கு செல்ல முடியும். எனக்குத் தெரிந்த வரையில் இது AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் மூலம் அவரது உருவத்தைப் பயன்படுத்தினார்களோ தெரியவில்லை? அவரால் அங்கு செல்ல முடியாது.

அவர் அங்கு சென்றார் என்பதை என்னால் நம்ப முடியாது. அது நடக்க வாய்ப்பில்லை.அவர் எப்படி அங்கு செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *