கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எழுதிய நூல் வெளியீட்டு விழாவை விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இது ராஜபக்சக்களை சுத்தப்படுத்தும் ஒரு முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
நவீனின் கவலை
இந்த விழா முரண்பாடானது. இது “ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஒன்று” என அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
“ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் — ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த சஹ்ரான் ஹாஷிமே சூத்திரதாரி என இங்கும் குறிப்பிடப்பட்டது”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாகல ரத்நாயக்க வஜிர அபேவர்தன மற்றும் தலதா அத்துகோரல உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டமை குறித்து நவீன் திஸாநாயக்க தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
![]()