இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் சமூக ஊடக கூட்டமைப்பு ஆதரவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும் சர்வதேச பத்திரிகையாளர்கள் சமூக ஊடக கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் பத்திரிகையாளர்கள் சமூக ஊடக கூட்டமைப்பின்தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர், அகில இந்திய செயலாளர் விதேஷ்குமார், தமிழகத்தின் செயல் தலைவரும், தமிழ் சினிமா தயாரிப்பாளர் முருகராஜ் , தமிழகத்தின் மாநில பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர்

கலந்துகொண்டனர்.

இதில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கும் என தெரிவித்ததுடன், பத்திரிகையாளர்கள் நிலன்கருதி 6 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கையளித்துள்ளனர்.

அதனடிப்படையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், பத்திரிகையாளர்கள் நலனுக்காக, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

குறித்த மனுவில், தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், பத்திரிகையாளர்களின் பாதுகாவலர்களாக செயற்பட்டு வரும், புரட்சி தமிழர் அமைப்பு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மனமார்ந்த நன்றிகள்

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும். மேலும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் வருகிற 2026, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நல்லாட்சி மலர்ந்திட அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது. மேலும் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள எங்கள் சங்கங்களின் உறுப்பினர்கள் அதிமுகவுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகளில் பணியாற்ற தயாராக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக, அன்றாட உலகச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடுவதோடு, அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும், பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் எனப் பாராது ஓய்வின்றிப் பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளர்களின் இத்தகைய பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக கொண்டு பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் பத்திரிகையாளர் நலவாரியம் 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டு, உழைக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை, இயற்கை மரணத்திற்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய உதவித் தொகைகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர் நலவாரியத்தில் தற்போதுவரை 3674 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தமிழகம் முழுவதும் 10,000, க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் தாலுகாவிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களையும் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் தலைவராக, தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட கூடிய, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து தமிழக அரசின் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் தலைவராக அறிவிப்பதற்கு பரீசிலனை செய்ய வேண்டும். இதனை சர்வதேச பத்திரிகையாளர்களின் முதன்மை கோரிக்கையாக தங்களிடம் முன் வைக்கிறோம்.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, நலிந்த ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.12,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தாங்கள் தாய் உள்ளத்தோடு பரீசிலனை செய்து மாதந்திர ஓய்வூதியம் ரூ.20,000, ஆயிரமாக, உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித அடிப்படை சலுகைகளூம் 50, ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அழிவின் விளிம்பில் வாழ்ந்து வரும் தாலுகாவை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் செய்தித்துறை மூலமாக வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊழியர்களைப் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்க ஒப்புதல் வழங்க வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு செய்தித்துறை மூலமாக மானிய விலையில் வழங்கக்கூடிய 3,செண்ட் பட்டா 2005, ஆண்டுக்கு பிறகு எந்த மாவட்டங்களிலும் முறையாக வழங்கப்படவில்லை. இதை கள ஆய்வு செய்து அந்த, அந்த, மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு போர்கால அடிப்படையில் மானிய விலையில் பட்டா வழங்கப்பட வேண்டும்.

பத்திரிகையாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட வேண்டும்.

பத்திரிகையாளர் நல வாரியத்தில் உள்ள புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் குழுவில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை கட்டாயம் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.தமிழக பத்திரிக்கையாளர்கள் நலன் சார்ந்து இந்த 6, அம்ச கோரிக்கை மிகவும் முக்கியமானது.

தாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தாய் உள்ளத்தோடு நடைமுறை படுத்த வேண்டும் என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் சமூக ஊடக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button