பலதும் பத்தும்

வக்கீல்கள் ஏன் Black Coat அணிகிறார்கள்?

பொதுவாகவே ஆடைகளுக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது தொன்று தொட்டு நடந்தேறிவரும் ஒரு வியமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள். அதாவது ஒருவரின் ஆளுமைத் திறனில் பாதி, அவர் அணியும் உடைகளைப் பொறுத்தே வெளிப்படுகிறது என்பதையே இந்த பழமொழி குறிப்பிடுகின்றது.

அப்படி ஒருவருடைய அடையாளத்தையும், குணத்தை மற்றும் ஆளுமையையும் பிரதிபலிப்பதில் ஆடை பெரும்பங்கு வகிக்கின்றது என்றால் மிகையாகாது.

இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு தொழில் துறையினரின் அடையாளமாகவும் குறிப்பிட்ட சில ஆடைகள் காணப்படுகின்றது.

அந்தவகையில்,வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் கருப்பு உடை அணியும் வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஏன் இவர்கள் கருப்பு நிற கோட் அணிகின்றார்கள் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

இந்த வழக்கம் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது. கருப்பு நிற ஆடை வலிமை, அதிகாரம் மற்றும் பணிவின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

வக்கீல்கள், நீதிக்காக, பணிந்து செல்ல வேண்டும் என்பதற்தை வலியுறுத்தும் விதமாகவும், இந்த கருப்பு ஆடை வழங்கப்படுகிறதாம்.

மேலும் பொதுமக்களிடமிருந்து,வேறுப்படுத்தி காட்ட தனித்தன்மை, மற்றும் பாரபட்சமற்ற தன்மையைக் குறிக்கிறது. கறுப்பு நிறம் நித்தியம், தலைமை மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.

மேலும், இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது, ஏனென்றால் கறுப்பு நிறம் மற்ற நிறங்களை தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது, இது நீதிபதியின் பாரபட்சமற்ற தன்மையை பறைசாற்றுகின்றது.

கருப்பு நிறத்தில் வெள்ளையை தவிர வேற எந்த நிறத்திலும் எழுத முடியாது. அதுபோல நீதிபதியின் முடிவே இறுதி முடிவு.

எந்த சூழ்நிலையிலும் அதை மாற்ற முடியாது என்ற காரணமும் குறிப்பிடப்படுகின்றது.17ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றதாம்.

பிரிட்டனின் ராணி மேரி என்பவர், 1694ல் பெரியம்மை நோயால் இறந்தார். அப்போது, அவரது கணவர் வில்லியம்ஸ், அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் துக்க விசாரிப்புக்கு கருப்பு கவுன்களில் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக இந்த சம்பவம் தான் வக்கீல்கள் இன்றுவரையில் கருப்பு கோட் அணிய ஆரம்பப்புள்ளியாக இருந்ததுள்ளது.

காலப்போக்கில் மருத்துவர்களும் கருப்பு கோட் அணியும் வழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை, மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இருவரும் கருப்பு கோட் அணிந்திருந்தனர்.

காலப்போக்கில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக மருத்துவர்கள் கோட்டின் நிறத்தை வெள்ளையாக மாற்றினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button