முச்சந்தி

பிரிட்டன்–சீனா வலுக்கும் புதிய உறவுகள்: உலக அரசியல் சமநிலையை மாற்றுமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா


(கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் ஒருவர் முதல் முறையாக சீனாவுக்கு செல்லும் நிலையில், அவருடன் பிரிட்டனின் வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கையில் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சென்றமை குறிப்பிடத்தக்கது)

உலக அரசியலில் சமநிலை சக்திகள் மாறிவரும் சூழலில், பிரிட்டன்–சீனா உறவுகள் புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்கா–பிரிட்டன் உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த மாற்றங்கள் பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் கவனிக்கத்தக்க கேள்விகளாக உள்ளன.

பிரிட்டனின் பிரதமர் கியார் ஸ்டார்மர் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக கடந்த ஜனவரி 28 அன்று சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை நேரில் சந்தித்து பிரதமர் ஸ்டார்மர் உரையாடினார். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் ஒருவர் முதல்முறையாக சீனா நாட்டுக்குச் செல்லும் நிலையில், அவருடன் பிரிட்டனின் வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கையில் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பிரிட்டன் பிரதமர்:

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) சீனாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டதும், பல ஆண்டுகளாக இருந்து வந்த உறவு முறிவுகளை நிவிர்த்தி செய்ய,
சீனாவில் பிரிட்டன் பிரதமர் விஜயம் மிக முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக, சீனாவுடன் சீர்குலைந்துள்ள இருதரப்பு உறவுகளை சீரமைத்தல், வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்தல் என்பதாகும். மேலும் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் வெளிநாட்டு கொள்கையிலிருந்து பிரிட்டன் சிறிதளவு விலகும் முயற்சி எனவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தற்போது பார்க்கின்றனர்.

கியார் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் அரசு (Labour Government) நடைமுறை சார்ந்த (pragmatic) வெளிநாட்டு கொள்கையை முன்னெடுக்க முயற்சிப்பதாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. முன்னதாக, மனித உரிமைகள், ஹொங்காங், உளவுத்துறை குற்றச்சாட்டுகள் போன்ற விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு விசா இல்லை:

பிரிட்டிஷ் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முப்பது நாட்களுக்கும் குறைவாக சீனாவிற்கு வருகை தரும் பிரிட்டிஷ் குடிமக்கள் இப்போது விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியார் ஸ்டார்மர் இடையே பெய்ஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

இந்த நடவடிக்கையை பிரிட்டிஷ் வணிகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் வர்ணித்ததோடு, லண்டன் தனது சேவைத் துறையை மேலும் வலுப்படுத்த நம்புவதாகவும் கூறினார். அறுபதுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்களுடன் சீனா சென்ற பிரதமர் ஸ்டார்மர், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்த பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க உறவில் பிளவு?

தற்போதைய சூழலில் பிரிட்டன் – சீனா இடையிலான உறவுகள் சர்வதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் பிளவுப்படக் கூடும் என அஞ்சப்படுகிறது. கிரீன்லாந்து விவகாரத்தில், நீண்டகால கூட்டாளிகளான பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்து வருகின்றார்.

இதனால், அமெரிக்காவின் நேரடி எதிரிகளில் ஒன்றாகக் கருதப்படும் சீனாவுடன் முன்னணி நாடுகள் கைகோர்பது புதிய வர்த்தகம் மற்றும் புதிய புவியியல் அரசியல் களத்தை உருவாக்கும் என அரசியல் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே, கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த சில வாரஙகளுக்கு முன்பு சீனா சென்றிருந்தார். இதையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜெர்மனியின் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் சீனாவுக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுடனான உறவின் மூலமாக
பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பிரஜைகளுக்கு விசா இல்லா பயணச் சலுகை வழங்கப்பட்டமை ஒரு முக்கியமான விடயமாகும். அதேவேளை
ஆள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இணைந்து செயல்பட இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமரின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சீனா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனப் பிரதமர் கியார் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

இரு தலைவர்களின் சந்திப்பு பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்’ மண்டபத்தில் எண்பது நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘விஸ்கி’ மதுபானம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கனடா பிரதமர் :

உலக அரங்கில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், பிற மேற்கத்திய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து கைகோர்க்க தொடங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அரசு முறை பயணமாக சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2017-க்கு பிறகு சீனாவிற்கு சென்ற முதல் கனடா பிரதமர் இவராவார்.

கனடாவை தொடர்ந்து, இப்போது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி, சீனா சென்று அந்நாட்டுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டொனால்டு டிரம்ப், கனடா மீது வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார். இந்நிலையில், பிரிட்டனின் நடவடிக்கை குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை :

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் அடி ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் அடாவடியான வரி விதிப்பு கொள்கைகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.

குறிப்பாக ஏற்றுமதியை அதிகம் நம்பி இருக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கான தங்கள் ஏற்றுமதி குறையுமானால் அதை ஈடுகட்டுவதற்கு ஏற்ப, வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் ஆராய்ந்து வருகின்றன.
சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்​டன் பிரதமர் கியார் ஸ்டார்​மர்பெய்​ஜிங்​கில் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசியமை
குறித்து லண்​டனில் உள்ள பிரதமர்
அலு​வல​கம் வெளி​யிட்​ட அறிக்​கை​யில், “இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கும் வகை​யில் சீரான, நீண்டகால மற்​றும் வியூக ரீதியி​லான கூட்​டாண்​மையை உரு​வாக்க இரு நாட்டு தலை​வர்​களும் உறுதிபூண்டுள்ளனர். கருத்து
வேறு​பாடு​கள் உள்ள துறைகளில் வெளிப்​படை​யான பேச்​சு​வார்த்​தையைத் தொடர அவர்​கள் ஒப்​புக்​கொண்​டனர். பரஸ்பர நலன் சார்ந்த துறை​களில் ஒத்​துழைப்பை அதி​கரிக்​க​வும் இந்த சந்​திப்​பின்​போது உடன்​பாடு எட்​டப்​பட்​டது” என்று தெரிவிக்கப்பட்டது.

சீனா செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கியார் ஸ்டார்மர், ‘‘அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி உள்ளேன். எனவே, டிரம்ப்பை கோபப்படுத்தாமல் சீனாவோடு பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த பிரிட்டனால் முடியும்’’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரிட்டன் பிரதமரின் சீன பயணம் குறித்து டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அப்படி செய்வது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு குறித்துப் பேசிய கியார் ஸ்டார்மர், ‘‘சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த விளைவுகளை வழங்கியுள்ளது. சில உண்மையான முன்னேற்றங்களை எட்டியுள்ளோம். ஏனெனில், வழங்குவதற்கு இங்கிலாந்திடம் நிறைய இருக்கிறது. விசா இல்லாத பயணம், விஸ்கி மீதான வரி குறைப்பு என முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. உறவை மேம்படுத்த நாங்கள் என்ன செய்கிறோம் என்பதற்கு இவைதான் அடையாளம். பரஸ்பர நம்பிக்கையையும் மரியாதையையும் உருவாக்கும் வழியாக இந்த சந்திப்பை நாங்கள் பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button