பலதும் பத்தும்

மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

அதன்படி, இந்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் மாயமானதுடன், காணாமல் போன சமயம் அதில் 11 பேர் இருந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையிலேயே இந்த விமானம் மாயமாகியிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button