பலதும் பத்தும்

கின்னஸ் சாதனை படைத்த ”குண்டு மனிதர் ” மரணம்

உலகின் அதிக எடை கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோ இளைஞர், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41வயது ) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு சுமார் 600 கிலோ (1,322 பவுண்ட்) எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தார்.

இருப்பினும் கடந்த சில நாட்களாக கடுமையான சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், அகுவாஸ்காலிண்டஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button