பிரதமர் ஹரிணி ‘றோ’ உறுப்பினர்; கஸ்ஸப தேரரின் கண்டுபிடிப்பு

பிரதமர் ஹரிணி இந்திய ‘றோ’ உளவுப் பிரிவின் உறுப்பினர் என்றும், இவர் கல்வி மறுசீரமைப்பு என்ற போர்வையில் பிள்ளைகளின் மூளைகளை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார் என்றும் பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்வி மறுசீரமைப்பு என்ற போர்வையில் எமது பிள்ளைகளின் மூளைகளை அழிக்கும் வசையில் பிரதமர் ஹரிணி செயற்படுகின்றார். இவர் இந்திய ரோ உளவுப் பிரிவின் உறுப்பினராவார். இவர் எமது பிள்ளைகளை இல்லாமல் வெய்கின்றார். பிள்ளை இல்லாத பெண் எவ்வாறு பிரதமராவது. காலையில் இங்கு சோறு சாப்பிட்டுவிட்டு பகலில் டில்லியில் சோறு சாப்பிடுகின்றார். இவ்வாறான ஒருவரால் நாட்டுக்கு நன்மை கிடைக்குமா?
![]()