பலதும் பத்தும்

திருகோணமலையில் குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன்

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்கு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு குரங்கு கடிக்கு உள்ளான 12 வயதுடைய சிறுவனே தக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாலை நேரத்தில் பள்ளிவாயலுக்கு மதக் கடமையை நிறைவேற்ற தொழுகைக்காக சிறுவன் சென்ற வேலையில் குரங்கு தாக்கியுள்ளது.

சிறுவன் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் அண்மைக்காலமாக குறித்த குரங்கு தொடர்ச்சியாக மக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதால் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button