சுற்றுலா செல்ல விரும்பும் நாடு; இலங்கைக்கு 3ஆம் இடம் வழங்கிய இந்தியர்கள்

இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த 10 நாடுகளில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளது
சுற்றுலாத் துறையில் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் விரும்பப்படும் இடமாகவும், இந்தியர்களுக்குப் பிடித்த விடுமுறை இடமாகவும் தாய்லாந்து உள்ளது.மேலும் மின்னணு மற்றும் வாகன ஏற்றுமதியிலும் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டின் இறுதி விடுமுறைப் பயணங்களில் இந்தியப் பயணிகளுக்கு அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட நாடுகளில் தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது.
உலகளாவிய நாடுகளில் பயணம், வாழ்வு மற்றும் வேலை செய்ய உலகின் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும், விசிட் விசாக்கள் மற்றும் நீண்டகால ரெசிடென்சி திட்டங்களில் பல முக்கிய மாற்றங்களை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியப் பயணிகளுக்கான முன்பதிவுகளில் 2025இல் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், 2025இன் குளிர்காலப் பயணங்களில், இந்தியப் பயணிகளின் முன்பதிவுகள் 5 மடங்கு அதிகரித்துள்ளன. அழகிய கடற்கரைகள், மலிவு விலை, குறுகிய பயண நேரம், கலாசார பாரம்பரியம் ஆகியவை இலங்கை பயணத்திற்கான முக்கிய காரணங்கள். பல பயண நிறுவனங்கள், இலங்கையைத் தேனிலவு மற்றும் திருமண வைபவங்களுக்குச் செல்ல சிறந்த நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன.
![]()