பலதும் பத்தும்

அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!

3,500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கடந்த வாரம் திரையரங்கில் வெளியான படம் அவதார் 3. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் Zoe Saldaña, Sam Worthington, Oona Chaplin உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதற்கு முன் வந்த அவதார் போலவே தான் இந்த மூன்றாம் பாகமும் உள்ளது, எதுவும் வித்தியாசம் இல்லை என பலரும் கூறினார்கள். இதனால் வசூலும் சற்று குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இதுவரை அவதார் 3 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் 3,350 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது, இதற்கு முன் வந்த அவதார் படங்களின் வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button