பலதும் பத்தும்

தரையில் சென்று திடீரென வானில் சீறி பாய்ந்த வாகனம்; கணப்பொழுதில் நடந்த பாரிய விபத்து!

பயணித்துக்கொண்டிருந்த இரண்டு கார்களின் மேலாக மெர்டிஸ் வகை காரொன்று பாய்ந்து சென்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தப் பயங்கர விபத்துச் சம்பவம் ருமேனியாவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் ஒன்றன் பின் ஒன்றாக இரு கார்கள் பயணித்துக்கொண்டிருந்தன. இதன்போது அதற்கு எதிராக மெர்டிஸ் வகை காரொன்று பயணித்து அந்தக் கார்களின் மேல் பாய்ந்து சென்றுள்ளது.

கணப்பொழுதில் இரு கார்களுக்கு மேல் மெர்டிஸ் கார் பாய்ந்து சென்று கோர விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தப் பயங்கர விபத்தில் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்த விபத்துத் தொடர்பான காணொளியில் பாதிப்புக்கள் நேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இரண்டு கார்களின் மீது குறித்த மெர்டிஸ் கார் பாய்ந்து செல்லும் காட்சி கணப்பொழுதில் பதறவைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button