பலதும் பத்தும்

வெள்ளத்தினால் மஞ்சளாக மாறிய வயல் நிலங்கள்

இயற்கை அனர்த்தத்தினால் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள் தற்போது மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பதுடன் பயிர்கள் அழுகிய நிலையில் காணப்படுகின்றன
திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட நெற் செய்கை விவசாய நிலங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விதைத்து ஓரிரு வாரங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகவும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறந்ததனால் நெற் பயிர்ச் செய்கை அழிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம் பிரதேச கரிக்கட்டை மலையாற்றுவெளி வயல் நிலப் பகுதியில் உள்ள சுமார் 573 ஏக்கர் வயல் நிலங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது போன்று சம்மாந்துறை வெளியில் 200ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் சீரற்ற கால நிலையால் நெற் பயிர்ச் செய்கை மஞ்சள் நிறமாகவும் அழுகிய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அழிந்து போன வயல் நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button