”என் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு ”.. பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் முகநூல் பதிவு….

மண் சரிவில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்ட வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்கிரமவின் அந்த நிகழ்வு தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது ,
வெலிமட, கெப்பிட்டிபோல, ரேந்தபோல போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் ஒரு பிரதேசம் . கடந்த வாரம் நாட்டில் என்றும் இல்லாதவாறு இடம் பெற்ற வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தத்தின் போது ரேந்தபொல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மண் சரிவில் அதே இடத்தில் புதையுண்டு போன குரூரமான சம்பவம் இடம் பெற்றது.
அந்த இடத்திற்கு எனது தலைமையில் சென்ற பொலிஸ் குழு சேறும் சகதியுமாகவிருந்த மண்ணை விலக்கிக் கொண்டு புதையுண்ட உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டோம் .அப்போது கண்டெடுக்கப்பட்ட அந்த ஒவ்வொரு உடல்களையும் என் இரு கைகளாலும் தூக்க வேண்டிய அளவுக்கு நான் துர்ப்பாக்கியமானவனாக இருந்தேன்.
அதன் போது அதில் சிறிய மகன் ஒருவன் எழுதிய பென்சில் ஒன்று உடலின் அருகே கிடந்ததை கண்ணுற்றேன்.அதன் போது நான் மிகுந்த மனவேதனையடைந்து அதை என் உடலுடன் சேர்த்து வைத்துக் கொண்டேன் பின்னர் அந்த பென்சிலை என்னிடமே வைத்துக்கொண்டு ஏனைய உடல் களை உறவினர்களிடம் ஒப்படைத்தேன். இச் சம்பவம் என் வாழ் நாளில் மறக்க முடியாது ஒன்றாகிவிட்டது.

![]()