ஆஸ்திரேலிய சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு 200 சதவீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியச் சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு 200 சதவீதம் அதிகரித்துள்ளது எனப் புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்த அளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கண்காணித்த தென் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வு, இளைஞர்களின் இணைய மோகம் இப்போது சாதனை அளவை எட்டியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
கொவிட் தொற்றுநோய்க்கு முன்பு சிறுவர்களிடையே தினசரி சமூக ஊடகப் பயன்பாடு 26 சதவீதமாக இருந்தது. மேலும் 2022ஆம் ஆண்டளவில் இது வியக்கத்தக்க வகையில் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஊரடங்குகள் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகள் இளைஞர்கள் சமூக
ஊடகங்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளதாக அதிகாரிகள்
கூறுகின்றனர். அதே காலகட்டத்தில் கலை மற்றும் பொழுதுபோக்கிற்கான
வாசிப்பும் குறைந்துள்ளது.
கலை நடவடிக்கைகளில் ஒருபோதும் பங்கேற்காத சிறுவர்களின் எண்ணிக்கை
26 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாகவும், ஒரு புத்தகத்தைக்கூட எடுக்காத சிறுவர்களின் எண்ணிக்கை 11 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள்
காட்டுகின்றன.
![]()