ஆதரவா? எதிர்ப்பா?; அல்லது நடுநிலையா?; தமிழரசுக் கட்சி ஆராய்ந்தது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் பாராளுமன்றக் குழுவும் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாடின.
பாராளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது குறித்து நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவிருந்தது.
கட்சி எடுக்கும் முடிவை, பாராளுமன்றத்தில் இன்று மாலை இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு சமர்ப்பிக்கும் வரவு – செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கும் தீர்மானத்தைக் கட்சியின் அரசியல் குழுவும் பாராளுமன்றக் குழுவும் இணைய வழியில் கூடி இறுதி செய்ய வேண்டும் என அண்மையில் வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()