முச்சந்தி

செம்மணியை தாண்டுமா அனுரவின் சிக்ஸர்?….  நவீனன்

(இன்று அனுரா அடிக்க போகும் கிரிக்கட் சிக்ஸர் எவ்வாறு என்பது எவருக்கும் தெரியும். அதாவது தாயகத்தில் தமிழ் மக்களை திசை திருப்பி, சிங்கள மக்களையும் தன்பக்கம் திருப்பி, தானோ இந்த நாட்டின் மிகவும் சமாதான விரும்பியாக, தேசிய வீரனாக தன்னை காட்டிக் கொள்ள முயல்கின்றார்)
இத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்களின் உயிர்களின் மேலாக அனுர செம்மணி தாண்டி, யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் அமைக்கப்பட உள்ள கிரிக்கெட் மைதானமானது தமிழர்களுக்கு ஒரு அவமானகரமான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
மண்டைதீவு புதைகுழிகள் மேல் மைதானம் :
1990களில் யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்காத நிலையில், அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்ட நிலத்தில் கிரிக்கெட் மைதானம் என்பது அனுராவின் சிங்கள இனவாத அகங்காரத்தின் முகத்தை அப்பட்டமாக காட்டிக் கொள்கிறது.
தமிழர் தாயகத்தை உலுக்கிய செம்மணிப் படுகொலைகள், மண்டைதீவு புதைகுழிகள், இன்னும் பல ஆயிரம் புதைகுழிகளுக்கு பொய்யாகிப்போன நீதி விசாரணைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஈழத்தில் பல இடங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொடூர கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்படவில்லை.
முப்பது ஆண்டு கடந்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தை உலுக்கிய செம்மணிப் படுகொலைகள் பொய்யாகிப்போன நீதி விசாரணைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி ஒருபோதும் கிடைக்கவில்லை.
ஈழத்தில் பல இடங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இந்த சம்பவம் நடைபெற்று பல ஆண்டு கடந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இத் தருணத்தில் யாழ்ப்பாணத்தில் சுமூக நிலை இருப்பது போல காட்டிக் கொண்டு, தமிழ் மக்களை திசை திருப்பும் வண்ணமே இத்தகைய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.
சர்வதேச நீதி பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புலம்பெயர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர்களை திசை திருப்பும் வண்ணமாகவே இத்தகைய வேலைகளை ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டு செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.
செம்மணி படுகொலைற்கான நீதிப் பொறிமுறை சர்வதேச அரங்கில் வேண்டும் என்றே பல சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அவர்களையும் திசை திருப்ப வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட சதியாகவும் கூட இருக்கலாம் என்றும் நாங்கள் கருதலாம்.
இன்று உலகளாவிய ரீதியில் தமிழர்களின் மனிதப் புதைகுழிகளுக்கு ஒரு நீதி வேண்டும் என்பது வேண்டப்படுகிறது.
முக்கியமாக அனுர அரசின் அரசியல் நடவடிக்கைகள் எல்லாம், தமிழர்களின் உரிமைகளை தட்டி கழித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தியும் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தி வருகிறது போல சிங்கள அரசு முயல்கிறது.
விளையாட்டும்- வீதி அபிவிருத்தியும்:
விளையாட்டும், வீதி அபிவிருத்தி என்பதை காட்டிக்கொண்டு ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசு, தனது முன்னைய அரசுகளின் இன அழிப்பு வேலைகளை மிக காத்திரமாக மறைத்து செயல்படுகின்றது. அதற்கு சில ஒத்து ஊதிபவர்களாக, சில தமிழர்களும் செயற்பட்டு வருவதும் கவலைக்குரிய விடயமாகும் .
இன்று அனுரா அடிக்க போகும் கிரிக்கட் சிக்ஸர் எவ்வாறு என்பது எவருக்கும் தெரியும். அதாவது தாயகத்தில் தமிழ் மக்களை திசை திருப்பி, சிங்கள மக்களையும் திசை திருப்பி தானோ இந்த நாட்டின் மிகவும் சமாதான விரும்பியாக தன்னை காட்டிக் கொள்ள முயல்கின்றார்.
அனுரவும் ஒரு சிங்கள தேசத்தின் ஒரு இனவாத அரசியல் இருந்தே உருவாகியவர் என்பதை நாங்கள் மறக்க முடியாது. அவரது அரசியல் பின்புலங்களை நாங்கள் திரும்பிப் பார்த்தால், அனுர வந்த பாதை என்பது பல்வேறு வகையிலும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவர் என்பதை உணர்த்தி நிற்கின்றது. நீண்ட காலம் தமிழர்களுக்கு எதிராக இருந்ததுடன்
முன்னைய இனவாத அரசுகளுக்கு பக்க துணையாக அனுரவின் அரசியல் பயணம் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டது.
இப்போது தன்னை சமாதான விரும்பிய காட்டிக் கொள்வது, இன்றைய காலத்தில் அரசியலுக்காக தன்னை போலியாக மாற்றிக் கொண்ட விடயமாகவே கருதலாம். இவரின் வேறுபட்ட இனவாத அரசியல் செயல்பாடுகளும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளும் என்பது நீண்டகாலமாக அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான்.
முன்னாள் ஸ்ரீலங்கா அரசின் அரசியல் தலைவர்கள் தங்களை நேரடியாகவே இனவாதிகளாக, சிங்கள மக்களுக்கு தங்களை சிங்கள தேசிய வீரராக காட்டிக் கொண்டதை வரலாறு காட்டுகிறது.
பட்டலந்த வதைமுகாமும் ரணிலும் :
1987- 1989 ஜேவிபி கிளர்ச்சியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள்,
ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்த பின்னரே ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோதக் கொடிய செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால் வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்கள் பல இருந்தன. அரச படைகளாலும், இராணுவ துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இதுவரை விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.
இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் நேர்மை கடந்தகால சிங்கள அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதனால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்தது என்பதும் உண்மையே.
ஆனால் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் மீது இந்த அரசு நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் அண்மையில் நடந்த ரணில் கைது நாடகம் இதற்கு மாறாகவே நடந்துள்ளது.
ரணில் மீதான அப்பட்டமான பல குற்ற விசாரணைகள் இருந்தாலும், ஜேவிபி அரசு, மிகப் பலவீனமான அனுதாபத்துடன் கூடிய குற்றச்சாட்டுகளை தெரிவித்ததுடன், பின்னர் ரணில் விக்ரமசிங்க விடுதலையானார். ஆகையினால் இது போன்றே ராஜபக்ச அரசின் மீதும்
பலவீனமான குற்றச்சாட்டுகளை முன் வைக்க அனுர அரசு முயலும். ராஜபக்ச தலைமையிலான அரசின் முன்னைய போர்க் குற்றங்களை சர்வதேச விசாரணைகளில் இருந்து விடுவிக்க இந்த அரசு உதவும் என்பது புலப்படுகிறது.
இவை அனைத்தும் சிங்கள இனவாதத்தை வளர்க்கும் இன்னொரு வகையிலான நடவடிக்கையாகவே நாம் இதனை கருத வேண்டும். ஏனெனில் அவருடைய செயல்பாடு என்பது சிங்கள மக்களுக்கு தன்னை ஒரு தேசிய வீரனாய் அடையாளப்படுத்திக் கொண்டது தெரிய வருகிறது.
போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகள் மர்மங்களையோ, விசாரணைகளயோ எந்த ஒரு சிங்கள அரசும் முன்னெடுக்கவில்லை. ஈழத்தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையே உள்ளது. இந்த விடையத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதனூடாக தமிழ் உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
சிறிலங்கா அரச பயங்கரவாதம்:
நீண்டகாலமாக சிறிலங்கா அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.
 தேர்தல் வெற்றிக்காகவே பேச்சளவில் இன நல்லிணக்கம், சம தருமம், தேசிய ஒற்றுமை என பறைசாற்றும் தற்போதைய அனுர அரசு தமிழர் மீதான படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதே நகைப்புக்கிடமாகும்.
தற்போது மாற்றங்களை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசாங்கமும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு நீதி வழங்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. ஜெனிவாவில் மனித உரிமை மீறல்களை உள்ளக விசாரணை மூலமே தீர்க்க முடியும் என்று உறுதியாக அனுர அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விசாரணை கோரிக்கை:
இனியும் செம்மணி புதைகுழிகள் விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர். காலங்காலமாக தமிழ் மக்களின் மீது போர் தொடுத்த சிங்கள அரசுகள் ஒரு போதும் நீதியை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
இன நல்லிணக்கம், உண்மையை கண்டறிதல் என்ற அடிப்படையில் தேர்தல் பரப்புரையில் தெரிவித்து ஆட்சியை பிடித்துள்ள இந்த அரசும் எவ்வகையிலும் தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிகிறது.
ஆனால் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட்பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் அனுரவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன் நீதி விசாரணையும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.
ஆனாலும் தற்போது மாற்றங்களை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசாங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர். காலங்காலமாக தமிழ் மக்களின் மீது போர் தொடுத்த சிங்கள அரசுகள் ஒரு போதும் நீதியை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்கவில்லை எனவே இனிமேலாவது சிங்கள
ஆட்சியாளர்கள் தங்களுக்கான நீதி பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *