வாழ்நாள் முழுவதும் படுக்கையில் கழிக்க வேண்டிய நிலையில் ரணில்

பிணை கோரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டால், ரணில் விக்கிரமசிங்க கூட்டு எதிர்க்கட்சியை வழிநடத்துவதற்கு பதிலாக தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருக்கும் என்று விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையிலேயே இவ்வாறு கூறிய அமைச்சர் லால்காந்த மேலும் தெரிவிக்கையில்,
ரணிலின் வழக்கறிஞர்கள் அவரது மருத்துவ நிலைமைகள் குறித்து சமர்ப்பித்த அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும், இவ்வளவு கடுமையான மருத்துவ நிலைமைகளுடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா என்ற கேள்வி எழுகிறது
ரணில் விக்கிரமசிங்க அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவார் என்ற நம்பிக்கை இருந்தால், அவரது வழக்கறிஞர்கள் அதை அழித்துவிட்டார்கள் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, ரணில் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார். எனவே கூட்டு எதிர்க்கட்சி வேறொரு தலைவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
![]()