முச்சந்தி
தாய்லாந்து – கம்போடியா எல்லைத் தகராறு; மோதலுக்கு மையமான 800 ஆண்டு சிவன் கோவில்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையே எல்லைப் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்தப் பிரச்சனை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. தாய்லாந்து, கம்போடியாவுடனான நில எல்லையை மூடியுள்ளது. மேலும் இரண்டு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன.
இந்த எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க, சர்வதேச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி, குறிப்பிட்ட எல்லைப் பகுதி கம்போடியாவிற்கு சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும், இந்த தீர்ப்பு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தை முழுமையாகத் தணிக்கவில்லை.

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள், ஆசியான் அமைப்பின் மூலம் எல்லைப் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இந்த முயற்சிகள் முழுமையான பலனளிக்கவில்லை. எல்லைப் பிரச்சனை இன்னும் ஒரு முக்கியமான பிரச்சினையாகவே நீடித்து வருகிறது.
நீண்ட கால எல்லைப் பிரச்சனை:
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே 820 கிலோமீட்டர் நீளமான எல்லை உள்ளது. இதில், பல பழங்கால கோயில்கள் உள்ள பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை உள்ளது.
ஜூன் மாத இறுதியில் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது, இதில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். பதட்டங்களைத் தணிக்க, தாய்லாந்து அரசாங்கம் கம்போடியாவிற்குடனான நில எல்லையை மூடியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைவரும் கம்போடியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து-கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்டு எல்லை குறித்த நீண்டநாள் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளதை அடுத்து, தாய்லாந்து, கம்போடியா ஆகியவற்றின் அதிகாரிகள் சந்தித்து பதற்றத்தைத் தணிக்க முயன்று வருகின்றனர்.
தாய்லாந்து அரசாங்கம் நிலவரத்தைச் சுமுகமாகத் தீர்க்க முயல்வதாக அந்நாட்டுப் பிரதமர் பெய்த்தொங்தார்ன் ஷினவாத் தெரிவித்தார்.
பல கிலோமீட்டர் நீளமான எல்லையில் பழங்காலக் கோயில்கள் கொண்டுள்ள பல்வேறு பகுதிகள், தெளிவாக வகுக்கப்படாத நிலையில் அவ்விரு நாடுகளுக்குள்ளே எல்லைப் பிரச்சினை பல்லாண்டுகளாக நிலவி வருகிறது.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் நான்கின் தொடர்பில் கம்போடியா, அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உறுதியாக உள்ளது. நீதிமன்றத்தில் இந்தச் சர்ச்சைகளுக்குத் தீர்ப்பை நாட தாய்லாந்து விரும்பவில்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கம்போடியாவின் எதிர்வினை:
தாய்லாந்தின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கம்போடியா, தாய்லாந்து எல்லையில் உள்ள ஏழு மாகாணங்களில் உள்ள அனைத்து நில எல்லை சோதனைச் சாவடிகளிலும் அனைத்து வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை, தாய்லாந்து பிரதமர் பெய்த்தொங்தார்ன் ஷினவத்ராவின் அரசாங்கத்திற்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது தொடர்பாக அவரது ஒரு தொலைபேசி அழைப்பு கசிந்துள்ளது.
இதனையடுத்து தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய
கம்போடியா தடை விதித்தது. அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடி உள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கம்போடியா தடை விதித்தது. அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடி உள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.சர்வதேச தலையீடு:
இந்த நான்கின் பகுதிகள் குறித்து தமது நாடு விவாதிக்கத் தயாராக இல்லை என்று கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரத்துவ கடிதம் ஒன்றையும் அனைத்துலக நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் செய்ய ஐ.நா. சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாய்லாந்து, கம்போடியா எல்லையில் மீண்டும் சண்டை மூண்டுள்ளதையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.
தாய்லாந்து, கம்போடியா எல்லையில் உள்ள ஆலயம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளிடையே அடிக்கடி சண்டை மூண்டு வருகிறது. இதனையடுத்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பொதுச் செயலர் பிரச்சனையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது என்றும், தாய்லாந்தும், காம்போடியாவும் தீவிர பேச்சுவார்த்தையில் முடிவு காணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மோதலுக்கு மையமான 800 ஆண்டு பழமையான சிவன் கோவில்:
இரு நாட்டு இராணுவ மோதலுக்கு மையமான 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், தா மோன் கோயில், லேட்டரைட் மற்றும் மணற்கற்களால் கட்டப்பட்ட கெமர் கால சிவன் ஆலயமாகும்.
12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இந்து கோவிலான தா மோன் தோம் அமைந்துள்ள நீண்டகால சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி தொடர்பாக தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே மீண்டும் பதட்டங்கள் வெடித்துள்ளன.
கம்போடியா-தாய்லாந்து எல்லையில் உள்ள டாங்க்ரெக் மலைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில், இரு நாடுகளாலும் உரிமை கோரப்படுகிறது. இது கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, அதன் பிரதான அறையில் ஒரு புனித சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.மே 2025 இல் நடந்த ஒரு கூட்டத்தில் இரு தரப்பினரும் அந்த இடத்தில் தலா ஐந்து வீரர்களாக துருப்புக்களின் இருப்பைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்ட போதிலும், பகைமை விரோதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
பிரசாத் தா மோன் தாம் என்றும் அழைக்கப்படும் தா மோன் கோயில், லேட்டரைட் மற்றும் மணற்கற்களால் கட்டப்பட்ட கெமர் கால சிவன் ஆலயமாகும். அதன் அசாதாரண தெற்கு நோக்கிய நுழைவாயில் மற்றும் மலைப்பாதையில் அதன் மூலோபாய இருப்பிடம் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

நீண்ட காலமாக ராணுவ பகைமைகள் தொடர்ந்தாலும், கம்போடிய மற்றும் தாய் அதிகாரிகள் கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் வருகைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தளம் ஒரு சுற்றுலா தலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()