கவிதைகள்
தேநீர்… கதை… கலை

தேநீர் என்பது என்னவென்றால்
ஓர் இழப்பின் அழுகைக்கு
பின்னரான ஆறுதல்..
நெடு நேரப் பயணத்திற்கு
பின்னான ஓய்வு..
விரக்தியின் பின்னரான புது
அஸ்தமனம்..
ஓர் அழகிய காதலுக்கான கண
நேர சந்திப்பு..
ஓர் தனிமையின் தலை கோதி விடும்
பெண்ணின் ஸ்பரிசம்..
அச்சு அசலாய் சொல்வதென்றால்
யாருமே இல்லை என்பவனுக்கு
உற்ற துணை உயிர், காதல், முத்தம்,
அத்தனையும் தேநீர் தான்..
![]()