பலதும் பத்தும்

தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் “இதய” துடிப்பு

தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் சைலண்டாக ஒரு முக்கியமான மாற்றம் நடக்கிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பூமியில் புதிதாக ஒரு கடன் உருவாகும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த உலகில் சைலண்டாக பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. சிறு மாற்றங்கள் கூட பூமியின் செயல்பாட்டையே மாற்றுவதாகவே இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு ; உருவாகும் புதிய மெகா கடல் | Heart Beats Underground New Mega Ocean Is Forming

இதனால் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதன் காரணமாகவே உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதயத் துடிப்பு

இதற்கிடையே தெற்கு ஆப்பிரிக்காவில் பூமிக்குக் கீழே அசாதாரணமான நிகழ்வு நடந்து வருவதாக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

மூன்று டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் ஒரு வித அதிர்வுகள் ஏற்படுகிறதாம். இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போலவே ஏற்படுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு ; உருவாகும் புதிய மெகா கடல் | Heart Beats Underground New Mega Ocean Is Forming

உருகிய மாக்மா பூமியின் மேலோட்டை கீழே இருந்து தாக்குவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இது படிப்படியாகக் கண்டத்தைக் கிழித்து, ஒரு புதிய கடலை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

 

அஃபார் பிராந்தியம் மற்றும் மெயின் எத்தியோப்பியன் ரிஃப்ட் முழுவதும் இருந்து 130க்கும் மேற்பட்ட எரிமலை பாறை மாதிரிகளைச் சேகரித்த ஆய்வாளர்கள், அதை மற்ற தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதில் தான் இப்படி ஆப்பிரிக்காவுக்குக் கீழ் மிகப் பெரிய மாற்றம் நடந்து வருவது தெரிய வந்துள்ளது.

 

புதிய கடல்

இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் டெக்டோனிக் தட்டுகள் ஆழமான மெண்டில் மேல்நோக்கிப் பாய்வதை எவ்வாறு பாதிக்கின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.

இப்படிக் கண்டம் பிளவுபடுவதால் ஒரு புதிய கடல் படுகை உருவாகும். அதேநேரம் இந்தப் பிளவு உடனடியாக ஏற்படாது. இவை மெல்ல மெல்ல ஏற்படும். இதனால் பல மில்லியன் ஆண்டுகளில் பிளவு முழுமையடைந்து கடற்பரப்பு விரிவடையும்.

 

 

தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு ; உருவாகும் புதிய மெகா கடல் | Heart Beats Underground New Mega Ocean Is Forming

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் டெரெக் கெய்ர் மேலும் கூறுகையில், “இந்த மெண்டில் மேலே வருவதற்கும் பூமியின் பிளேட்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

 

எரிமலை வெடிப்பு, பூகம்பம் மற்றும் கண்டம் உடையும் செயல்முறையைப் புரிந்து கொள்ள இது உதவும்” என்றார். இப்போது ஆய்வாளர்கள் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button