பலதும் பத்தும்

ஏர் இந்தியா விபத்தின்போது மாடியிலிருந்து குதித்து தப்பிய மாணவனின் திகில் வாக்குமூலம்!

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள விஜே மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றது

இந்த கோர விபத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விஜே மருத்துவக் கல்லூரியில் பயிலும் சென்னையைச் சேர்ந்த மாணவர் அருண் பிரசாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தின் போது கல்லூரி விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த அவர், திடீரென வெடி சத்தம் கேட்டதையடுத்து அதிர்ச்சியில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து குதித்து தப்பியதாக தெரிவித்தார்.

உலகையை உழுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் தப்பி உள்ள சம்பவம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

நாங்கள் 1.30 மணியளவில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்

5வது மாடியில் பெரியளவில் வெடிச்சத்தம் கேட்டது, எங்கு பார்த்தாலும் கரும்புகையாக காணப்பட்டது.

என்ன ஆனது என்று எங்களுக்கு புரியவில்லை

உடனடியாக நான் முதல் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து உயிர்தப்பினேன், ஒரு சிலர் கட்டிடத்தை சுற்றி நின்று கொண்டிருந்தனர்

அதன்பிறகுதான் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது

15- 20 நிமிடங்களுக்குள் மீட்புப் படையினர் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button