பலதும் பத்தும்

உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்கள் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டாரங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 15 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், யாழ்.மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, வட்டாரங்களில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button