உலகம்

இந்தோனேசியாவில் தொடரும் பதற்றம்; விமான சேவைகள் ரத்து..!

இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் குறைந்தது இரண்டு டஜன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிழக்கு சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,703 மீட்டர் உயர இரட்டை சிகர எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி  வெடித்து சாம்பலைக் கக்கியதை அடுத்து நாட்டின் எரிமலையியல் நிறுவனம் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.
இதனையடுத்து இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் குறைந்தது இரண்டு டஜன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பாலிக்கு செல்லும் பல சர்வதேச விமானங்கள் வெடிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக பாலி சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.
இதேவேளை  எரிமலை வெடிப்பு உள்ளூர் அதிகாரிகளை எரிமலைக்கு அருகிலுள்ள இரண்டு கிராமங்களில் வசிக்கும் டஜன் கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது என்று உள்ளூர் பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் அதிகாரி அவி ஹாலன் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள இரண்டு கிராமங்களிலும் உள்ள தெருக்கள் அடர்த்தியான சாம்பல், சரளை மற்றும் மணலால் நிரம்பியிருப்பதாகவும் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button