உலகம்

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

”சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்யக்கூடாது” எனக் கோரி லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

சில இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்,போர்ப் படை வீரர்களையும் தேசியக் காவற்படை வீரர்களையும் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பணியமர்த்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அமெரிக்கப் போர்ப் படை வீரர்கள் லொஸ் ஏஞ்சலிஸ் நகரைவிட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி”லொஸ் ஏஞ்சலிஸ் நகரின் மத்திய வட்டாரத்தில் உள்ள அரசாங்கக் கட்டடத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ‘ நாங்கள் எதிரிகள் அல்ல, சாதரண மக்கள் என்றும் போராட்டக்காரர்கள் முழுக்கமிட்டு வருகின்றனர்.

இதேவேளை கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசாமும் போர்ப் படை வீரர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *