இலங்கை

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் அவதியுற்ற மாணவி

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் அவதியுற்ற மாணவி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றய (11) தினம் பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி மற்றும் வாந்தி மயக்கம் போன்ற நோயால் வைத்தியசாலையில் அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க முடியாமல் வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற குறித்த மாணவி உடல்நலக்குறைவால் பாடசாலையில் இருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை காணப்பட்டதுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியும் தந்தை வைத்தியசாலை வைத்தியரிடம் சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது வைத்தியர் வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்

இதன் பின் மாணவியும், தந்தை தனது தொந்த விருப்பின் பெயரில் மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button