பலதும் பத்தும்

பிறந்த குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் தூக்கிச் சென்ற அவலம்

பிறந்த குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று பிறந்த குழந்தையின் சடலத்தை தெருநாய்கள் கடித்து சிதைத்துள்ளது.

மருத்துவமனை கழிப்பறை அருகே குழந்தையின் சடலத்தை ஒரு நாய் கவ்விக்கொண்டு செல்வதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.

பின்னர், குழந்தையின் உடலை மீட்கும் போது பாதி உடல் சிதைந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது பெண் ஒருவர் கழிப்பறையில் பிரசவித்துள்ளதாகவும், பின்னர் அவர் நபர் ஒருவருடன் வெளியேறி இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள வாயில்கள் திறந்திருப்பதால் தெரு நாய்கள் உள்ளே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button