பலதும் பத்தும்

மகனின் கல்லறையில் புரண்டு ,கதறிய தந்தையின் சோக நிமிடம்!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருந்தனர். இவர்களில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவராவார்

அவரது கல்லறையில் இருந்து விலக மனமில்லாத தந்தை பி.டி.லக்‌ஷ்மண், ‘நான் இங்கேயே இருந்து விடுகிறேன்’ என கதறி அழுதது பலரையும் கலங்க செய்துள்ளது

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததோடு 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பூமிக் லக்‌ஷ்மணின் இறுதி சடங்கு நடைபெற்றது.

அவருக்காக அவரது அப்பா வாங்கிய நிலத்தில் பூமிக்கின் உடல் புதைக்கப்பட்டது.

‘நான் இங்கிருந்து வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை. நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நான் எனது மகனுக்காக வாங்கிய இடத்தில் அவனது நினைவகம் எழுந்துள்ளது.

எனது மகனுக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்க கூடாது. எனது நிலை எந்தவொரு தந்தைக்கும் வரக்கூடாது’ என மகனின் கல்லறையை விட்டு விலகாது கதறி அழுதுள்ளார்

அவரை பலர் ஆறுதல் சொல்லியும் தேற்ற முடியாத நிலையில் இது வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியானது

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் தரப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button