பலதும் பத்தும்

தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு.

இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்தவகையில், கோடை வெயிலுக்கு இதமாக அனைவரும் அதிகம் எடுத்துக்கொள்ளும் ஒரு பழம் தான் இந்த தர்பூசணி பழம்.

ஆனால், தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

பொதுவாக, தர்பூசணியில் 92% தண்ணீர் இருக்கிறது, எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின் மேற்கொண்டு தண்ணீர் குடித்தால் செரிமான சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது.

தர்பூசணி சாப்பிட்ட பின்பு அதன் சாறு, ஏற்கனவே நம் குடலில் தங்கிவிடுகிறது. மேற்கொண்டு தண்ணீர் குடிக்கும் போதுதான் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின், 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

தர்பூசணியில் அதிகளவு கலோரிகள் உள்ளதால் இதை சாப்பிடும்போது தண்ணீர், சர்க்கரை, சோடா என எதையும் கலக்காமல் அப்படியே பழமாகவோ, சாறாகவோ சாப்பிடலாம்.

தற்போது, தர்பூசணியின் இனிப்பு சுவையை அதிகரிக்க சிலர் இந்த பழத்தில் சாட் மசாலாக்களை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

இதனால் அந்த பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து குறையும். மேலும், செரிமான கோளாறும் ஏற்படும் என கூறப்படுகிறது.

இப்படி மசாலா சேர்த்து சாப்பிடும் போது சுவை நன்றாக இருந்தாலும், இது வயிற்றுக்கு உபாதையை ஏற்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button