பலதும் பத்தும்

காதலிக்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கோட்வாலி மைந்தரை சேர்ந்தவர் சாய்ரா (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் ரபி.

சாய்ராவை காதலிப்பதாக கூறி ரபி அவரை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.

ஆனால் இளம்பெண் ரபியை காதலிக்க மறுத்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராவை பின் தொடர்ந்து சென்ற ரபி அவரை நடுவழியில் மடக்கி ஆபாசமாக திட்டினார். அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்து ரபியை சரமாரியாக தாக்கினார்.

தன்னை தாக்கிய வாலிபருக்கும் சாய்ராவுக்கும் தொடர்பு இருக்கும் என ரபி சந்தேகம் அடைந்தார்.

இதனால் தனக்கு கிடைக்காத சாயிரா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது. எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சாய்ரா எங்கெல்லாம் செல்கிறார் என நோட்டமிட்டார்.

இந்த நிலையில் 01 ஆம் திகதி காலை சாய்ரா மாட்டுக்கு தீவனம் எடுத்து வர வயலுக்கு சென்றார். சாய்ராவை பின் தொடர்ந்து சென்ற ரபி அவரை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் சரமாரியாக குத்தினார். வயிறு, முகம், கை, கால், மர்ம உறுப்பு என 18 இடங்களில் குத்தினார்.

வலியால் அலறி துடித்த சாய்ரா தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனாலும் மனம் தளராத ரபி அவரை குத்தி கொலை செய்தார். பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டுச் சென்றார்.

வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் சாய்ராவை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடிப் பார்த்தனர்.

அங்குள்ள கால்வாயில் சாய்ரா இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ராவின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சாய்ராவின் போனை பொலிஸார் சோதனை செய்தபோது ரபி 5 தடவை மிஸ்டு கால் கொடுத்தது தெரியவந்தது.

பொலிஸார் ரபியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னை காதலிக்க மறுத்த சாய்ராவை கொலை செய்து வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு தூங்கியதாக தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து ரபியை கைது செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button