பலதும் பத்தும்

44 பாம்புகளைக் கடத்திய நபர்!

தாய்லாந்திலிருந்து இந்தியாவின் மும்பை நகருக்குப் பல வகை பாம்புகளைக் கடத்தியவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த இந்திய பிரஜை ஒருவரின் பயண பையில் 44 இந்தோனீசிய கட்டுவிரியன் வகைப் பாம்புகள் உள்ளிட்ட பல நஞ்சுப் பாம்புகள் இருந்ததாக மும்பை சுங்கத்துறை ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட நபரிடம் ஐந்து ஆமைக் குஞ்சுகளும், மூன்று சிலந்தி வகைகளும் இருந்துள்ளன.

கைப்பற்றப்பட்ட பாம்புகளின் படங்களை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டனர். பாம்புகள் நீலம், மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button