பலதும் பத்தும்

ஒரே விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள்!

ஐரோப்பாவில் ஒருவரின் விந்தணு மூலம் 67 குழந்தைகள் பிறக்க வைக்கப்பட்டுள்ளன. இதில், தற்போது 10 குழந்தைகளுக்கு அரியவகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முதலில் இந்த விவகாரம் வெளியே பெரிதாக தெரியாத நிலையில், இரு குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அதற்கு மரபணு திரிபே காரணம் என தெரியவந்துள்ளது.

உடனே அவர்கள் தனித்தனியே விந்தணு மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அப்போது, அந்த விந்தணு மையத்தினர், 2008ஆம் ஆண்டு விந்தணு பெறப்பட்டபோது இப்படியான மரபணு திரிபு கண்டறியப்படவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர். மேலும், அந்த விந்தணு மூலம் கடந்த 2008 ஆண்டு முதல் 1015ஆம் ஆண்டு வரை மொத்தம் 67 குழந்தைகள் பிறந்துள்ளன எனும் தகவலும் தெரியவந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button