பலதும் பத்தும்

மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இவற்றில் 101 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

எவ்வாறாயினும் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்தியசுகாதார துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button