முச்சந்தி
யாழில் இன்று இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()