ரணிலின் குறுஞ் செய்திக்கு 98 மில்லியன் ரூபா செலவா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக வெளியான செய்தியை முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்துடன் தொடர்புடைய அதிகாரி டினுக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹாச்சி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
![]()