முச்சந்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 154 முறைப்பாடுகள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை குற்றவியல் முறைப்பாடு மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 154 முறைப்பாடுகள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) 5 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 14 வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button