பலதும் பத்தும்

அழகிப் போட்டியில் வென்ற இஷாதி அமந்தா நாடு திரும்பினார்

அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா,  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி,

அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

இஷாதி அமந்தா  தோஹாவிலிருந்து கத்தார் விமான சேவையின் QR – 658 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பின்னர், “சில்க் ரூட்” முனையத்தில் தங்கி, காலை 09.00 மணியளவில்,  இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றியுள்ளார்.

மேலும் ,தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேனநாயக்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சுபாஷினி பெரேரா மற்றும் அதன் உதவிப் பணிப்பாளர் சுரேஷனி பிலபிட்டிய ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *