நாங்கள் திருடர்களை பாதுகாக்கின்றோமா”?; குற்றச்சாட்டுகளிற்கு பிமல் ரத்நாயக்கவின் பதில் என்ன?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கின்றது என்ற குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள அமைச்சர் பிமல்ரத்நாயக்க எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபக்சாக்கள் கைதுசெய்யப்படும்போது சஜித்தே அதனை எதிர்த்து குற்றம்சாட்டுகின்றார் என தெரிவித்துள்ள பிமல்ரத்நாயக்க யோசித ராஜபக்ச கைதுசெய்யப்படும்போது ஹர்சன ராஜகருணவே அதனால் மிகவும் வேதனையடைந்தவராக காணப்படுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் தான் ரணில்விக்கிரமசிங்க பக்கம் நிற்கின்றாரா?ராஜபக்ச குடும்பத்துடன் நிற்கின்றாரா அல்லது மக்களுடன் நிற்கின்றாரா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் எனபிமல்ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் யோசித ராஜபக்ச கைதுசெய்யப்பட்டமை,நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கிரிஸ் திட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள பிமல்ரத்நாயக்க அரசாங்கம் ஊழலிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *