அமெரிக்காவை உலுக்கியுள்ள விமானவிபத்து – பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் பலி

அமெரிக்காவில்  ஹெலிக்கொப்டருடன் மோதி விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் ரஸ்யாவின் பிரபல பனிச்சறுக்கு வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான யெவ்ஜினா சிஸ்கோவாவும் ( 52) வடிம் நவுமொவ்வும் ( 55) பயணித்ததாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தம்பதியினர் 1991 முதல் 96ம் ஆண்டுவரை ரஸ்யாவிற்காக ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாடி தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்றவர்கள்.

ரஸ்யாவில் தங்கள் பனிச்சறுக்கல் விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்கள் பின்னர், அமெரிக்காவில் குடியேறி பயிற்சியாளர்களாக மாறியிருந்தனர்.

அமெரிக்காவிற்காக விளையாடிய அவர்களின் மகனும் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டியொன்றில் கலந்துகொண்டுவிட்டு 13  பனிச்சறுக்கு  வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தவேளையே இவர்களது விமானம் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த 13 பனிச்சறுக்கு  வீரர்களும் ரஸ்யாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பிள்ளைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஸ்யாவிற்காக  பனிச்சறுக்கு  போட்டிகளில் விளையாடிய இன்னா வோலியன்ஸ்கயா என்ற வீராங்கனையும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.

இதேவேளை விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில்  பனிச்சறுக்கு விளையாட்டு சமூகத்தை சேர்ந்த பலர் பயணித்தனர் என்பதை அமெரிக்காவின் பனிச்சறுக்கல் விளையாட்டிற்கான  தலைமை அமைப்பு உறுதி செய்துள்ளது.

இந்த விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் கன்சாஸ் விச்சிட்டாவில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத இந்த  பெருந்துன்பியல் சம்பவத்தினால் நாங்கள்மனமுடைந்துபோயுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *