தினமும் 69 கோடி ரூபாவுக்கு மது அருந்தும் இலங்கையர்

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 69 கோடி ரூபாவை ரூபாவை மதுபானத்திற்க்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்(ADIC) தெரிவித்துள்ளது.

அதேவேளை மதுபான பாவனையால் நாளொன்றுக்கு 40 – 50 பேர் வரை உயிரிழப்பதாகவும் இந்த தொகை வருடத்திற்கு 15,000 – 20,000 எனவும் கூறப்படுகின்றது.இதனால், இலங்கையில் பல குழந்தைகள் தந்தையை இழந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒன்று கூடும் இடங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபாவனை அதிகரித்திருப்பதால் சமூகக் குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாவை மதுபாவனைக்காக செலவழித்து வந்ததாகவும் இந்த தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நிர்வாக இயக்குந ர், சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

இன்னொரு ஆய்வில், மதுபானத்தினால் இலங்கைக்கு 165.2 பில்லியன் வருமானம் கிடைத்துள்ள போதிலும் மதுப்பழக்கத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆண்டொன்றுக்கு 214 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *