ஐ.தே.க- ஐ.ம.ச. இணைவு 4 ஆம் கட்ட பேச்சு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது தொடர்பான நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெறவுள்ளதாகவும் இரு கட்சித் தலைவர்களின் தீர்மானங்கள் இங்கு ஆராயப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவதை தீர்மானிக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

அடிப்படை முன்மொழிவுகள் தொடர்பான கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அவை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குறித்த தீர்மானங்கள் தொடர்பில் இரு கட்சித் தலைவர்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து வெற்றி பெறுவதற்கான கூட்டணியை அமைக்க இருக்கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *