வொஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந் நாட்டு நேரப்பு புதன் கிழமை (29) இரவு 09.00 மணியளவில் (02:00 GMT) மணியளவில் ஓடுபாதையை நெருங்கிக் கொண்டிருந்த போது, ​​78 பேர் வரை அமரக்கூடிய விமானம் ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானதாக விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மோதலின் போது விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 விமானம், கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மோதலை அடுத்து விமானம், ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய ஏறியில் விழுந்ததாக வொஷிங்டன், டி.சி.யில் அவசரகால பதிலைக் கையாளும் பிரிவினர் கூறியுள்ளனர்.

மீட்பு பணியாளர்கள் தற்சமயம் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *