உத்தரப்பிரதேசில் மத நிகழ்வின் போது ஏற்பட்ட விபரீதம்; 5 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பாக்பத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஜெயின் சமூக நிகழ்வொன்றின் போது, அமைக்கப்பட்டிருந்த மோடை இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாக்பத்தின் பாகூரில் நடைபெற்ற மத நிகழ்வின் போது மூங்கில் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட தற்காலிக மேடை இடிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஜெயின் துறவிகள் முன்னிலையில் ஆதிநாதருக்கு பிரசாதமாக லட்டுகளை வழங்குவதற்காக ஸ்தலத்திற்கு வந்தனர்.

இதன்போது, பக்தர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட தற்காலிக மேடை அவர்களின் எடையை தாங்க முடியாது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஏற்கனவே 108 அம்பியூலன்ஸ்கள் சேவையில் இருந்ததால், காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *