கொங்கோவின் கோமா நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

ஆபிரிக்க நாடான கொங்கோவின் மிகப்பெரிய நகரான கோமாவினை அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கொங்கோ மக்கள் தற்போது வெளியேறி வருகின்றனர் எனவும், மக்களின் வெளியேற்றம் காரணமாக குறித்த பிராந்தியத்தில் யுத்த நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை கோமா நகரை முழுமையாக தாங்கள், கைப்பற்றியுள்ளதாகவும் கொங்கொ இராணுவத்தினர் சரணடைய கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அரச படைகள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கிளர்ச்சிக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகளவான கொங்கோ இராணுவத்தினர் கோமா நகரில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *