உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் 170 புள்ளிகளைப் பெற்று வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு கடந்த 23 ஆம் திகதி மாலை வெளியாகியது.

அதன் அடிப்படையில் செல்வசேகரன் சத்யஜித் 170 புள்ளிகளைப் பெற்று கோட்ட ரீதியில் சாதனை புரிந்துள்ளார்.

மேலும், குறித்த பாடசாலை மாணவர்கள் கோட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *